இலங்கை

இலங்கையில் 58 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்ணொருவர் கைது!

விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று (10.02) கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் 55 வயது பெண் ஒருவர்  விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள கடமையில்லா வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் வைத்து சந்தேக நபருக்கு மற்றுமொரு பெண்ணினால் நகைகள் மற்றும் ஜெல் பங்குகள் அடங்கிய பார்சல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பார்சலை வெளியே உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்தால் 60 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக உறுதியளித்த நிலையில், அந்த பார்சலை பெற்றுக்கொண்டதாக கைது செய்யப்பட்ட பெண்  தெரிவித்துள்ளார்.

வயங்கொடை – மிரிடியலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த ஊழியரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!