ஜெர்மனியில் மாணவர் செய்த அதிர்ச்சி செயல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே போர் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வருகின்றது.
ஜெர்மனி நாட்டில் பலஸ்தீன ஆதரவு மாணவர் ஒருவர் ஆசிரியரை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சில போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியில் நோயக்கொலின் பிரதேசத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் பாடசாலை அதிபர் ஒருவரை பாடசாலையில் வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.
அதாவது நோயக்கொலின் உள்ள ஜிம்நாசியம் என்று சொல்லப்படும் பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயத மாணவன் பாலஸ்தீனத்துடைய கொடி ஒன்றை பாடசாலைக்கு எடுத்து வந்துளள்ளதுடன் பாலஸ்தீன துணி ஒன்றை உடலில் போத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனை பாடசாலை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இவ்வாறு கண்டித்ததால் 15 வயது மாணவர் குறித்த ஆசிரியரை கடுமையாக தண்டித்ததாகவும் தெரியவந்து இருக்கின்றது.
இதனடிப்படையில் தற்பொழுது பொலிஸார் 15 வயது மாணவனுக்கு எதிராக விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.