உணவு டெலிவரி பையை சோதனையிட்ட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, அதன் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடேரமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 9X9 மில்லி மீற்றர் ரக 97 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் டுபாயில் தங்கியிருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ளும் களுதுர தினேஷ் ஷாமந்த டி சில்வா என்ற”பபி” என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.