WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்
புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அதன் தரம் குறையாமல் அப்படியே அனுப்பும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் செயலி சோதித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இல்லாத மக்கள் தற்போது யாருமே இல்லை. குறிப்பாக வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் அனைவரும் கணக்கு தொடங்கி உபயோகித்து வருகின்றனர்.
குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வீடியோ கால், வாய்ஸ் கால் என வெளிநாடுகளில் இருப்பவர்களை கூட வாட்ஸ் ஆப் மூலம் ஈசியாக தொடர்பு கொள்ள முடியும். மேலும் மெசேஜ் மூலம் நாம் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.
வாட்ஸ் அப் பயனர்களை தக்க வைத்து கொள்ள வாடஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வாட்ஸ்ஆப் செயலியில் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் இந்த வசதி சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. தற்போது வரை ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை கம்பிரஸ் செய்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
புதிய வசதியில் புகைப்படம்,வீடியோ ஆகியவை அனுப்ப நேரம் குறைவாக ஆகும் வகையில் புதிய அப்டேட் உள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
sharpness, colour accuracy ஆகியவை எந்த வகையிலும் குறையாது என்பதே புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாகும். முதல்கட்டமாக பீட்டா பயனர்களுக்கும், பின்னர் படிப்படியாக அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.