குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின் ஆடைகளை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த 33 வயதுடைய சந்தேகநபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)