இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) காலை பதவியேற்றனர்.
மேலும், வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.





