நான்கு இஸ்ரேலியர்கள் மீது தடை விதித்த பிரித்தானியா!
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது தடைகளை விதிப்பதாக பிரிட்டன் அரசாங்கம் இன்று (12.02) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்குக் கரையில் குடியேறியவர்கள், தங்கள் நிலத்தை விட்டு வெளியேறுமாறு பலஸ்தீனியர்களை துன்புறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னோடியில்லாத அளவு” வன்முறைகளுக்கு விடையிறுக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் கூறியது.
Moshe Sharvit மற்றும் Yinon Levy ஆகியோர் “பாலஸ்தீனிய சமூகங்களை இடமாற்றம் செய்வதற்கான இலக்கு மற்றும் கணக்கிடப்பட்ட முயற்சியின்” ஒரு பகுதியாக சமீபத்திய மாதங்களில் பாலஸ்தீனிய குடும்பங்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களின் சொத்துக்களை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் Zvi Bar Yosef மற்றும் Ely Federman ஆகிய இருவர் மீதும் தடை சொத்து தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.