ருமேனியாவின் எல்லைக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
ருமேனியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் துறைமுகங்களான இஸ்மாயில் மற்றும் ரெனி மீது ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ருமேனியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (10.02) தெரிவித்துள்ளது.
நிலைமையை கண்காணிக்க தேசிய வான்வெளியில் “உளவுப் பணிகளை” மேற்கொள்வதற்காக துருக்கிய விமானப்படையின் F-16 ஜெட் விமானம் ருமேனிய விமான தளத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
தாக்குதல்களை ஒட்டிய இரண்டு மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.
உலகச் சந்தைகளுக்கு தானியங்கள் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்யும் கெய்வின் திறனை மாஸ்கோ சீர்குலைக்க முயன்று வருவதாக குற்றம் சாட்டப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
நேட்டோ உறுப்பினர்கள் ருமேனியாவின் பல பகுதிகளில் ட்ரோன் குப்பைகளைக் இனங்கண்டதாக தெரிவித்துள்ளனர்.