ஐரோப்பா

அஜர்பைஜான் தேர்தல்: வாக்கெடுப்பில் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் வெற்றி

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் 92% வாக்குகளைப் பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய போட்டிக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் பாகுவில் வீதிகளில் இறங்கினர்.

அலியேவ் 92.05% வாக்குகளைப் பெற்றதாகவும், 93% வாக்குகள் எண்ணப்பட்டதாகவும், சுமார் 76% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகளை அரசு ஊடகங்கள் மேற்கோள் காட்டின.

அலியேவின் தேர்தல் வெற்றிக்கு துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்