இலங்கையில் சீருடையை புறக்கணிக்கும் தாதியர்கள்!
தமது தொழிற்சங்கத்தின் தாதியர்கள் சீருடைகள் இன்றி வசதியான வேறு ஆடைகளில் பணிக்கு வரவுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தங்களுக்கு விருப்பமான ஆடையை அணிந்து செருப்புகளை அணிந்து கொண்டு இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நோயாளர் பராமரிப்பு சேவையை சீர்குலைத்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தாம் தயாரில்லை என தெரிவித்த அவர், இந்த தொழில் நடவடிக்கையின் மூலம் சர்வதேச சமூகம் கூட இலங்கை சுகாதார அமைச்சு தொடர்பில் மோசமான எண்ணத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும், இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால், தொழில் நடவடிக்கையை கடுமையாக்குவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் உறுதியளித்து சுற்றறிக்கைகள் கூட வழங்கிய பத்து மற்றும் பதினாறு ரூபா கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.