ஆப்பிரிக்கா

நான் தான் இயேசு எனக் கூறிய வந்த நபர்.. அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஊர்மக்கள்!

நான் தான் இயேசு எனக் கூறிய நபரை மக்கள் சிலுவையில் எற்றப்போவதாக கூறி வருகின்றனர்.

கென்யா, டோங்கரேன் பகுதியை சார்ந்தவர் எலியுட் சிமியு. நான் தான் இயேசு என்று கூறி தனக்கு கீழ் சீடர்களைத் திரட்டி மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்.தன் பெயருக்குப் பதிலாக தன்னை டோங்கரன் இயேசு என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். லிகோக்வே கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் அவருடைய சீடர்களாக உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஈஸ்டர் தினத்தில் அவரை சிலுவையில் ஏற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயேசு சிலுவையில் அரையப்பட்டு 3 நாளில் உயிர்த்தெழுந்தார்.அதேப்போல் இவரும் உயிர்த்தெழுகிறாரா என்று பார்க்கலாம் என மக்கள் கூறுகிறார்கள். 1981இல் பிறந்த சிமியுவின் பெற்றோர்களான பிரான்சிஸ் மற்றும் சிசிலியா சிமியு அவர் குழந்தை பருவத்திலே காலமானார்கள். 20 வயதில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. 8 குழந்தைகள் உள்ளனர்.

இவரது மனைவி, தனது கணவர் தண்ணீரை தேநீராக மாற்றினார் என்றும் அதை கிராம மக்கள் சிலர் ருசித்து பார்த்தனர் என்றும் கூறினார்.தான் இயேசு என்று தனது கணவர் கூறியதால் கிராமத்தில் தனது குடும்பத்தை ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது, இவர் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று அந்நாட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!