இலங்கை

கண்டி- அமெரிக்க யுவதி மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்!- சந்தேக நபர்கள்இருவர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 25 வயதுடைய அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவரிடம் இருந்த சுமார் 6,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பயணிகள் குழுவொன்று அவரிடம் இதுபற்றிக் கேட்டு நானுஓயா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இதன்படி, நானுஓயா பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 29ஆம் திகதி கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இந்த யுவதி தெரிவித்துள்ளார்.

Teenaged rape survivor raped again in UP police station, SHO arrested |  Lucknow News - The Indian Express

2,400 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தங்க வளையல், 3,600 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி வைரம் பதித்த காதணிகள் ஆகியவற்றை சந்தேக நபர்கள் திருடிச் சென்றதாக பொலிஸில் மேலும் முறைப்பாடு அளித்தார்.கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் சந்தேகநபர்கள் இருவருடன் மதுபானம் அருந்தியதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை எனவும் யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.சுயநினைவு திரும்பியபோது படுக்கையில் நிர்வாணமாக இருந்ததாக பொலிசாரிடம் கூறினார்.

சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை பெற நடவடிக்கை எடுத்துள்ளதுடன், வெளிநாட்டு யுவதியை சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்க முயற்சித்த போதும் அவர் மறுத்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்