திருகோணமலையில் அவதிக்குள்ளான நோயாளர்கள்!
திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் சிற்றூழியர்கள் ஊழியர்கள் மருந்தாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (01.02) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளம் அதிகரிப்பு, ஊழியர் பற்றாக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.

(Visited 13 times, 1 visits today)





