ஐரோப்பா

பிரித்தானியாவில் வெளிநாட்டவர்களுக்கு புதிய விசா ஊதிய வரையறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் வெளிநாட்டு ஊழியர் விசாக்களுக்கான புதிய குறைந்தபட்ச ஊதிய வரம்புகளை உள்துறைச் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் அமுலுக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என ள்துறை செயலாளர் James Cleverly தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு உள்துறை செயலாளர் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட நிலையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இளநிலை மருத்துவர்கள் போன்ற தொழில்முறை வேலைகளில் பணிபுரியும் பல பிரித்தானிய மக்கள், சம்பளக் கட்டுப்பாடுகளின் கீழ் வெளிநாட்டில் இருந்து தம்முடன் வாழ தங்கள் துணையை அழைத்து வர முடியாத நிலைமை ஏற்படும் என வாதிட்டனர்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏற்கனவே பிரித்தானியாவில் வசிப்பவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும்போது அவர்களுக்கான வாழ்விட அனுமதி கிடைக்குமா என்பது குறித்து அச்சம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் விசாவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பழைய விதிகளின்படியே மதிப்பிடப்படும் என்று உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது மற்றும் நாம் நிலையான நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பராமரிப்புப் பணியாளர்கள், திறமையான தொழிலாளர்கள் மீதான விதிகளை கடுமையாக்குதல் மற்றும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவதனை குறைப்பதற்காக ஆதரவை உறுதி செய்வதன் மூலம் நம் நாட்டிற்கு வரும் எண்ணிக்கையைக் குறைக்க நான் வலுவான நடவடிக்கைகளை எடுத்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2036 ஆம் ஆண்டளவில் 67 மில்லியனாக இருந்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 74 மில்லியனை எட்டும் என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் புதிய ஆய்வில், விருந்தோம்பல், கலை, கட்டுமானம், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைகள் புலம்பெயர்ந்தோருக்கான நுழைவுத் தேவைகளைக் கடுமையாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தால் வெற்றிடங்களை நிரப்புவது கடினமாக இருப்பதாகக் கண்டறிந்தது.

எனினும் புலம்பெயர்ந்தோர் லண்டனின் பொருளாதாரத்திற்கு 75 பில்லியன் பங்களிக்கின்றன. இது நகரத்தின் மொத்த உற்பத்தியில் 14 சதவீதத்திற்கும் அதிகமாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் உள்துறை அலுவலகம், திறமையான தொழிலாளர் விசாவில் வருபவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 26,200 இலிருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதாக அறிவித்தது.

பராமரிப்புப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்தும் சீர்திருத்தங்கள் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பராமரிப்பு வழங்குநர்கள் புலம்பெயர்ந்தோருக்கு நிதியுதவி செய்தால், பராமரிப்பு தர ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் அதே திகதியில் தொடங்கும்.

குடும்ப விசாவில் பிரித்தானியாவுக்கு சார்ந்தவர்களைக் கொண்டு வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு ஏப்ரல் 11ஆம் திகதி முதல் படிப்படியாக அதிகரிக்கும். இந்தத் திகதியில் இருந்து, வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினரை அழைக்க தொழிலாளர்கள் ஆண்டுக்கு குறைந்தது 18,600 பவுண்டிலிருந்து 29,000 பவுண்ட் வருமானம் ஈட்ட வேண்டும்.

புதிய வரம்பு 2024ஆம் ஆண்டு வசந்த காலத்தில் 29,000 பவுண்டிலிருந்து தொடங்கும் மற்றும் எதிர்காலத்தில் வரையறுக்கப்படாத திகதிகளில் கூடுதல் தொகை 34,000 பவுண்டாககவும் பின்னர் 38,000 பவுண்டாகவும் உயரும்.

பராமரிப்பு வழங்குநர்கள் தங்கள் குடும்பங்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதைத் தடை செய்தல் மற்றும் திறமையான தொழிலாளர் விசாவைப் பெறுவதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியத்தை 26,200 பவுண்டிலிருந்து 38,700 பவுண்டாக உயர்த்துதல் ஆகியவை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற நடவடிக்கைகளில் அடங்கும்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!