அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – மக்கள் வீடுகளில் முடக்கம்
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், இண்டியானா, லோவா, மைனே உள்ளிட்ட மாகாணங்களில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில மாகாணங்களில் வெப்பநிலை மைன்ஸ் 21 டிகிரி வரை பதிவானதால், மக்கள் வீடுகளில் முடங்க நேரிட்டது.
முக்கிய நகரங்களில் சாலைகளில் படர்ந்துள்ள பனி பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
பனிப்புயல் காரணமாக பல மாகாணங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் இருளில் மூழ்கின.
முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
(Visited 8 times, 1 visits today)