திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் தைப்பொங்கல் பூசை இடம் பெற்றது.
கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என நீதிமன்றம் வழக்குகள் இடம் பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த ஆலயம் மூடப்பட்டிருந்த நிலையில் எவ்வித பூசைகளும் நடைபெறாமல் இருந்த நிலையில் சிவில் சமூக அமைப்புக்களின் வேண்டுகோளின் படி பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.
இதேநேரம் அருகில் உள்ள பௌத்த விகாரையில் ஒலிபெருக்கி மூலம் அதிகம் சத்தம் போடப்பட்ட நிலையில் பௌத்த மக்களின் வழிபாடுகளும் இடம் பெற்றதையும் காணக் கூடியதாக இருந்தது.
(Visited 26 times, 1 visits today)