அதிக வெப்பத்தால் வீட்டில் இறந்து கிடந்த வயதான அமெரிக்க தம்பதி
அறையின் ஹீட்டர் 1,000 டிகிரி ஃபாரன்ஹீட் (537 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையை எட்டியிருந்ததால், வயதான தம்பதியினர் அவர்களது வீட்டில் உயிரிழந்துள்ளனர்.
84 வயதான ஜோன் லிட்டில்ஜான் மற்றும் 82 வயதான க்ளென்வுட் ஃபோலர்ஆகியோரின் உடல்கள் தென் கரோலினாவில் உள்ள அவர்களது வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாக பத்திரிகை தெரிவித்துள்ளது.
பொலிஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி, தமபதியினரை பலநாள் பார்க்காத குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் ஸ்பார்டன்பர்க் வீட்டில் அவர்களைச் சரிபார்க்க காவல்துறையினரை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பற்ற ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள், வீடு “மிகவும் சூடாக” இருப்பதைக் கவனித்தனர்.
திரு ஃபோலரும் அவரது மனைவியும் அவர்களது படுக்கையறைக்குள் இறந்து கிடந்ததாக காவல்துறையை தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர், அவர்கள் முதலில் ஹீட்டர் தீப்பிடித்ததாக நம்பினர்.
அவர்கள் அதை மூடுவதற்கு முன்பு அதன் வெப்பநிலை தோராயமாக 1,000 டிகிரி ஃபாரன்ஹீட் (537 டிகிரி செல்சியஸ்) என அளந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.