மூன்று நாட்டு இலங்கைக்கான தூதுவர்கள் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்
சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.
சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் இன்று(14) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு தூதுவர்கள் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

(Visited 13 times, 1 visits today)





