பிரான்ஸில் முதன்முறையாக அதிஷ்ட்டலாபச் சீட்டில் 240 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர்

பிரான்ஸில் முதன்முறையாக அதிஷ்ட்டலாபச் சீட்டில் 240 மில்லியன் யூரோக்கள் வென்ற நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Euromillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் இதுவரை இல்லாத பெரும் தொகை பணம் வெற்றிபெறப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சீட்டிழுப்பில் 240 மில்லியன் யூரோக்கள் வெல்லப்பட்டுள்ளது.
17, 30, 42, 48, 50 ஆகிய ஐந்து இலக்கங்களும் 4 மற்றும் 8 நட்சத்திர இலக்கங்கள் கொண்ட அதிஷ்ட்டலாபச் சீட்டே வெல்லப்பட்டுள்ளது.
Euromillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். முன்னதாக சென்ற ஆண்டு ஜூலை மாதம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் 230 மில்லியன் யூரோக்களை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)