இரண்டு ஊராட்சி கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம .
வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முகுந்தராயபுரம் மற்றும் லாலாபேட்டை ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு இடையே எல்லைகள் குறித்து பல ஆண்டுகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது .
இந்நிலையில் காஞ்சனா கிரி மலைப்பகுதியில் உள்ள சிவன் கோயில் தொடர்பாக இரண்டு ஊராட்சி கிராமங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அமைச்சு பேச்சு வார்த்தை மூலமாக தீர்வு காண மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு இரு கிராமங்களுக்கும் பிரச்சனை இல்லாமல் தீர்வு காணப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே சிவன் கோவிலில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதில் லாலா பேட்டை ஊராட்சி பகுதி சேர்ந்த சிலரை முகந்தராயபுரம் பகுதி சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது .
இதனால் ஆத்திரமடைந்த லாலாபேட்டை பொதுமக்கள் லாலாபேட்டை ஊராட்சியில் வைக்கப்பட்டு இருக்கும் அனைத்து கட்சி கொடி கம்பத்திலிருந்து கட்சி கொடிகளை ஏறக்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதை தொடர்ந்து உடனடியாக எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
எனக் கோரி இன்று லாலாபேட்டை பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து முத்துக்கடை பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக பரிசினை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.