பாரிஸில் பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
பாரிஸில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்துக்கு அருகே இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த நெருக்கடியான பகுதியை தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளமை தற்செயலானது இல்லை என்பதை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை பாதுகாக்க மேலும் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, 2024 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போதும் அதி உச்சப் பாதுகாப்பு கொண்டுவரப்படும் என பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் உலகம் முழுவதும் உள்ள ஒலிம்பிக் போட்டிகளை காண வரும் பார்வையாளர்களை அச்சுறுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.