கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை
 
																																		புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் 24 விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடபடவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக இன்றையதினம் இடம்பெற்று. இன்றைய அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இன்று இடம் பெற்றிருந்தது. இன்று இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.

இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும் . எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது. எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்.
களனி பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கென் இயந்திரத்தினை கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








 
        



 
                         
                            
