இந்தியா

லண்டனில் பென்னிகுயிக் நினைவிடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ : திமுக அரசு மீது குற்றம்சாட்டு

முல்லை பெரியாறு அணையை கட்டிய லண்டனில் உள்ள பென்னி குயிக்கின் நினைவிடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” ஐந்து மாவட்ட மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு அற்புதமான தலைவர் தான் பென்னி குயிக், அவருடைய முயற்சியால அந்த அணை கட்டப்பட்டது. இந்த நிலையில் லண்டனில் உள்ள அவரது கல்லறையை காண்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இதற்கு இறைவனுக்கும், அதிமுக பொதுச்செயலாளருக்கும் நன்றியை தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக உறுதிமொழி அளித்தது. ஜான் பென்னிகுயிக் சிலையை அமைத்து அதற்கான பணத்தை அவர்கள் கட்டவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை இங்கே சர்ச்சில் இருக்கிற உறுப்பினர்கள் சொல்லுகின்ற பொழுது ஒரு மிகப்பெரிய மன வேதனை ஏற்பட்டுள்ளது.

ஒரு தமிழன் என்ற முறையில் அது தென் மாவட்ட மக்கள் 5 மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுத்தவருக்கு இப்படிப்பட்ட ஒரு நிலையை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிக வருத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசு எல்லாருக்கும் அல்வா கொடுத்தார்கள். ஆனால் இந்த நினைவு சமாதியையும் அவருடைய பராமரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்றைக்கு அவர்களுக்கும் அந்த வாய்ப்பு கொடுக்கவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தநிலையில் இந்த கல்லறையில் பார்க்கும் போது மன வருத்தமாக உள்ளது.பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால் அதிமுக பொதுச்செயலாளரிடம் இதனை எடுத்த சொல்லி நானே முன்வந்து இந்த அவருடைய கல்லறையில் சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத் தொகையும் செலுத்துவதற்கு நான் முயல்வேன். அதற்கான என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுச்செயலாளரிடம் பேசி அந்த பணியை செய்வேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிப்படுத்தி கொள்கிறேன்.

இதே அதிமுக ஆட்சியாக இருந்தால் உரிய வகையில் பராமரித்து இருப்போம். இந்த திமுக அரசை பராமரிக்கவில்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு முன்பாகவே என்னுடைய முயற்சியால் மக்களிடத்திலே நிதி வசூல் பெற்று இந்த ஜான் பென்னி குயிக்கிற்கு கல்லறையையும் சிலையும் சீரமைப்பேன்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

 

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!