நாங்கள் போருக்கு எதிரானவர்கள் : மகிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகங்களுக்குச் சென்று காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தனது விசனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பாலஸ்தீன தூதரை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வந்தோம். அவருடன் பேசிவிட்டு கிளம்புவோம். நாங்கள் போருக்கு எதிரானவர்கள், இவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.” எனக் கூறினார்.
இதேவேளை, காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கையில் உள்ள பல சிவில் அமைப்புகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
(Visited 14 times, 1 visits today)