ஆசிய விளையாட்டு போட்டி களநிலைவரம் : முதலிடத்தில் சீனா!
ஆசிய ஒலிம்பிக் பேரவை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினர் இணைந்து இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டை இன்று (08.10) சீனாவின் ஹாங்சோ நகரில் நடத்தியுள்ளனர்.
15 உலக சாதனைகள் மற்றும் 37 ஆசிய சாதனைகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னர் பதிவான 170 சாதனைகளை இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீரர்கள் முறியடித்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில், சீனா 201 தங்கப் பதக்கங்கள், 111 வெள்ளிப் பதக்கங்கள், 71 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 383 பதக்கங்களை வென்று, விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றது.
இரண்டாவது இடத்தை ஜப்பான் பிடித்தது. அவர்கள் 52 தங்கப் பதக்கங்கள், 67 வெள்ளிப் பதக்கங்கள், 69 வெண்கலப் பதக்கங்கள் என 188 பதக்கங்களைப் பெற்றனர்.
கொரியா 42 தங்கப் பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 89 வெண்கலப் பதக்கங்கள் என 190 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 199 தங்கப் பதக்கங்களைத் தாண்டி, இம்முறை சீன வீராங்கனைகள் வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருப்பது சிறப்பு.