இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : 5000 பேர பாதிப்பு!
இலங்கையில் நிலவும் தென்மேற்கு பருவபெயர்ச்சி வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டகளப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், நுவரெலியா, வவுனியா, மற்றும் முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களில், 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மாவட்டங்களில் 200இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவபெயர்ச்சி காலநிலையின் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலையே நிலவும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.