ஜெர்மனியில் 3 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த பேராசிரியர்
ஜெர்மனியின் முன்சன் பொது வைத்தியசாலையில் கடமையைாற்றிய ஒருவர் மோசடிகளில் ஈடுப்பட்டமை தெரியவந்து இருக்கின்றது.
முன்சன் யுனிவர்சிடர் கிள்னிக் என்று சொல்லப்படுகின்ற பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் மோசடி சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.
அதாவது இந்த வைத்தியசாலையின் பேராசிரியராக இருந்த ஒரு வைத்தியர் ஒரு சில நிறுவனங்களிடம் இருந்து சில வகையான பொருட்களை இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் கட்டாயமாக பெற வேண்டும் என்ற குற்றவியல் குழு ஒன்றை உருவாக்கியதன் மூலம் இலாபம் அடைந்ததாக தெரியவந்து இருக்கின்றது.
அதாவது வலைபின்னல்கள் ஊடாக 3 மில்லியன் யுரோக்கள் வரை பேராசிரியர் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.
இதேவேளையில் அரச தரப்பு சட்டதரணியினர் வைத்தியசாலையில் கடமையாற்றிய இந்த குழுக்களுடைய நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்து இருக்கின்றது.
இந்த விசாரணையில் பேராசிரியர் தொடர்பில் பல மோசடிகள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு தலைமைதாங்கிய பேராசிரியர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே கடமையில் இருந்து விலகி சென்றதாக தெரிய வந்து இருக்கின்றது.