முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் இணைய அவர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலுக்கு திரும்புவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ கருத்தை வெளியிடவில்லை.
(Visited 16 times, 1 visits today)