வரலாற்றின் மிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு பதிவு
வரலாற்றில் இவ்வாண்டு மிக வெப்பமான ஆண்டாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு 50 சதவீத சாத்தியம் உள்ளதாக அமெரிக்கப் பெருங்கடல், காற்று மண்டல நிர்வாக அமைப்பு கூறியுள்ளது.
வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் 2023ஆம் ஆண்டு முதல் 5 இடங்களில் இடம்பெறும் என்று 99 சதவீதம் உறுதியாகச் சொல்லலாம் எனக் கூறப்பட்டது.
மிக வெப்பமான மாதமான ஜூலை மாதம் காணப்படும். கடந்த மாதம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஆக வெப்பமான ஜூலை என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
உலக மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.12 பாகை செல்சியஸாகப் பதிவானது. அது இதற்கு முன் பதிவான ஆக வெப்பமான ஜலையின் வெப்பநிலையை விட 0.2 டிகிரி செல்சியஸ் அதிகம்.
“அடுத்த ஆண்டு மேலும் சூடாக இருக்கலாம்” El Nino எனும் பருவநிலை நிகழ்வின் தாக்கம் அடுத்த ஆண்டு கடுமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப அடுத்த ஆண்டின் வெப்பமும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.