அமெரிக்காவில் திடீரென்று வெடித்து தீப்பிடித்த விமானத்தின் டயர் – தப்பிய பயணிகள்
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து தீப்பிடித்துள்ளது.
இதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
வர்ஜினியாவிலிருந்து 190 பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 757 விமானம், கடந்த புதன்கிழமை மாலையில் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது திடீரென டயர் வெடித்து அதிலிருந்து நெருப்பும் புகையும் வெளிப்பட்டது.
இதையடுத்து டாக்ஸி வே பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியே அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
Passengers were forced to evacuate a #Delta Boeing 757 (N767DL) after it landed at #Atlanta today at 5:37 p.m. Flight #DL1437 took off from #Richmond. The left main gear tire blew during landing, which sparked a fire.
🎥 ©Mike Russell | 📷 ©Bruce Campbell | ©Jean Druckenmiller pic.twitter.com/5libGzQtT7
— FlightMode (@FlightModeblog) August 3, 2023