கூகுள் குரோம் தேடுதளத்தில் புதிய வசதிகள் அறிமுகம்!
பயனாளர்களின் வசதிக்கேற்ப கூகுள் குரோம் தேடுதளத்தின் புதிய வசதிகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு மாற்றங்களோடு புதிய அப்டேட்டை வெளியிடுகிறது.
உலகின் முன்னணி இணைய தேடுதளமான கூகுள் குரோம் விளங்குகிறது. மேலும் தகவல் என்ற உடன் அனைவரின் எண்ணத்திற்கு வருவது கூகுள் குரோம். கூகுள் குரோமில் இல்லாத தகவல்களே இல்லை என்ற அளவில் எண்ணிலடங்கா தகவல்களை தனக்குள் சேகரித்து வைத்துள்ளது கூகுள் குரோம். இதனால் கூகுள் குரோமில் மணிக்கு பல கோடிக்கணக்கான தகவல்கள் தேடப்படுகிறது.
இந்த நிலையில் கூகுள் குரோம் தேடுதளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை கூகுள் நிறுவனம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் கூடுதல் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு கூகுள் குரோமின் சமீபத்திய அப்டேட்டில் ட்ரெண்டிங் சர்ச்சுகளை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்பிள் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் புதிய அப்டேட்டுகள் மூலம் கூடுதல் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் குரோம்யில் தேடும்போது மீண்டும் “அட்ரஸ் பாரை” கிளிக் செய்தால் தேடியவை பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லி என்று தேடும் பொழுது மீண்டும் அட்ரஸ் பாரை கிளிக் செய்தால் டெல்லியில் உள்ள உணவகங்கள், போக்குவரத்து வசதிகள், ஹோட்டல்கள் போன்றவற்றைப் பற்றிய விவரங்களும் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதோடு டச் டூர் சர்ச் அம்சம், பயனாளர்களின் தேடல் பரிந்துரைகள் 6 இருந்து 10 ஆக உயர்த்தியுள்ளது. அதோடு கூகுள் குரோம் ஓ எஸ், டெஸ்க்டாப், விண்டோஸ் ஆகியவையும் மறுவரையறை செய்யப்பட்ட பதிவிறக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இன்னும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்டேட்கள் மூலம் கூகுள் க்ரோம் பயனாளர்கள் கூடுதல் பயனடைவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.