சீனாவில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட 50,000 பேர்

சீன தலைநகர் பெய்ஜிங்-கில் தொடர் கனமழையால் 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். சீனாவை தாக்கிய டோக்சுரி சூறாவளியால் கடந்த சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
பெய்ஜிங், டியாஞ்சென் போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
பெய்ஜிங்கில் 50 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் உள்பட 11 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். மாயமான 27 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் சிக்கிக்கொண்ட இரண்டாயிரத்து 800 பேருக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
(Visited 14 times, 1 visits today)