இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் நீக்கம்
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் மொபைல் போன் கட்டணங்களுக்கான சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்திற்கான செலவு விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் சலுகைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளின் எந்தவொரு செலவையும் தீர்க்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 28 times, 1 visits today)





