பச்சை குத்துவதால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
பச்சை குத்துவதில் கட்டுப்பாடுகள் இல்லாததன் காரணமாக எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய் தாக்கம் அதிகரிக்கவும் வேறு பல நோய்கள் பரவுவதற்கும் வாயப்புள்ளது என இலங்கை பச்சை குத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாததாலும் நிறுவனங்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 140 நிறுவனங்கள் மட்டுமே பச்சை குத்தும் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் அறுவை சிகிச்சை அறை வசதிகள் இருக்க வேண்டும் என்றும் அனைத்து உபகரணங்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஊசி வகைகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றாலும் சில நிறுவனங்கள் அவற்றை கிருமி நீக்கம் செய்யாமல் பல முறை பயன்படுத்துவதாகவும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தேசிய STD மற்றும் AIDS திட்டமும் பச்சை குத்துவது பல்வேறு நோய்களை தாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.