அமேசன் காடுகளில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை ; 57 பேர் கைது, படகுகளிற்கு தீ வைப்பு
பொலிவியாவில் சட்டவிரோதமாக ஈடுபட்டுவரும் தங்க சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய ராணுவத்தினர் அதில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்தனர்.
அமோசன் காடுகள் வழியாக பாயும் ஆறுகளுக்கு அடியில் உள்ள மணற்பரப்பில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதால் அந்த மணலை டிரெட்ஜெர் படகுகள் மூலம் அள்ளி தங்க துகள்கள் சலித்தெடுக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் , மீன்களின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிப்படைகிறது.
பெனி என்ற பகுதியில் பொரிஸாரும் ராணுவத்தினரும் 6 நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் சட்டவிரோத சுரங்க அகழ்வில் ஈடுபட்ட 57பேர் கைது செய்யப்பட்டனர் . அவர்ளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 டிரெட்ஜர் படகுகளை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர் . இதனை கண்டித்து சுரல்க தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
(Visited 10 times, 1 visits today)