மூல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு!

பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியுள்ளார்கள். இதன்போது மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இது பெண் போராளிகளின் தடையங்களாக காணப்படுகின்றது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன இதன்போது இனம் காப்பட்டுள்ளன.
(Visited 17 times, 1 visits today)