ஜெர்மனியில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
ஜெர்மனியில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய பொருட்களின் விலை 15 வீதம் அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் உணவு பொருட்களுடைய விலை அதிகரிப்பானது 15 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பினால் ஓய்வு ஊதியத்தை பெற்று வாழ்கின்ற முதியோரிகளின் பொருளாதார நிலமையானது படும் மோசமாக அமைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இவர்கள் சமூக அமைப்புக்களுடைய உதவிகளில் வாழ வேண்டிய நிலமைக்கு உள்ளாகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தாஃவில் என்று சொல்லப்படுகின்ற அமைப்பில் உணவை பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் ஆர்வம் காட்டி வருவதுடன்,
மேலும் மற்றுமொரு அமைப்பிடம் இருந்தும் பொருட்களை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தாஃவில் என்று சொல்லப்படுகின்ற சமைத்த உணவுகளை வழங்குகின்ற அமைப்பானது தற்பொழுது புதிய உறுப்பினர்களை இந்த அமைப்பில் சேர்த்து கொள்ள தயக்கம் காட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதனால் பலர் தங்களது வாழ்க்கை செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது.