இளம்பெண்ணை அடிமையாக்கி பலருக்கு விருந்தாக்கிய விவகாரம்; ஜேர்மன் பெண்ணுக்கு தண்டனை விதிப்பு
இளம்பெண் ஒருவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்தாக்கிய ஜேர்மன் பெண் மீதான வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டவரான Nadine K என்னும் பெண், யாஸிடி இன இளம்பெண்ணான Naveen al K (22) என்பவரை அடிமையாக்கி, தன் கணவர் உட்பட பலருக்கு விருந்க்க உதவியாக இருந்துள்ளார்.
Nadine, 2014ஆம் ஆண்டு, ஜேர்மனியிலிருந்து தன் கணவனுடன் சிரியாவுக்குச் சென்று IS அமைப்புடன் இணைந்து அங்கு நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.பின்னர் அவரது குடும்பம் ஈராக்குக்கு திரும்பிய நிலையில், 2016ஆம் ஆண்டு, Nadineஉடைய கணவர், யாஸிடி இன இளம்பெண்ணான Naveenஐ அடிமையாகக் கொண்டுவந்துள்ளார்.
Naveen, பல்வேறு போராளிகளுக்கு வீட்டு வேலை செய்யவும், அவர்களுடன் பாலுறவுகொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.Nadineடைய கணவரும் பலமுறை தன் மனைவி அறிய Naveenஐ வன்புணர்ந்திருக்கிறார், தாக்கியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டு, IS அமைப்பு தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து Nadine குடும்பம் ஈராக்கிலிருந்து தப்பியோடும்போது குர்திஷ் படைகளிடம் சிக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ம் திகதி, ஜேர்மனிக்குள் நுழையும்போது, Nadine கைது செய்யப்பட்டார்.
Naveen கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கு ஜேர்மனியில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.Naveenஐ அடிமையாக்கிக் கொடுமைப்படுத்திய Nadineக்கு ஜேர்மனியின் Koblenz நகரிலுள்ள நீதிமன்றம், ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.