கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – கோடை காலம் முழுக்க நீடிக்கும் அபாயம்
கனடாவில் தொடர்ந்து காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றது.
இதனால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
கட்டுக்கடங்காத தீ கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என்று வட்டார அமைச்சர் ஒருவர் எச்சரித்தார்.
இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சுமார் 17,800 சதுர மைல் அளவிலான நிலம் தீக்கு இரையானது.
கனடாவின் மேற்குப் பகுதி காட்டுத்தீயால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சில நாள்களாகத் தணிந்திருந்த தீ மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது.
அதைச் சமாளிக்கச் சென்ற சில அதிகாரிகள் பின்வாங்க நேரிட்டதாகக் கூறப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)