என்.பி.பி. ஆட்சி கவிழுமா? பிரதி அமைச்சர் பதிலடி!
ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாக அறிவித்தார்.
அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் கவிழும் எனவும் எதிரணிகள் கருத்து வெளியிட்டுவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் எனக் குறிப்பிட்டார்.
ஆனால் ஒருவருடம் கடந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்த இரண்டு பூரணை தினங்களுக்குள் ஆட்கி கவிழுமாம்.
இது மக்களின் அரசாங்கம், மக்களால் அரசாங்கம் பாதுகாக்கப்படும். எதிரணிகள் கூறுவதுபோல இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். எனவே, எமக்கு எவ்வித அச்சமும் இல்லை.” – என்றார்.





