அடுத்த வருடம் பிரித்தானியா செல்லும் அர்ஜென்டினா(Argentina) ஜனாதிபதி
அர்ஜென்டினா(Argentina) ஜனாதிபதி ஜேவியர் மிலே(Javier Milei) ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பிரித்தானியாவிற்கு(Britain) விஜயம் செய்வார் என்று ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் செய்தித்தாள் தி டெலிகிராப்(The Telegraph) வெளியிட்ட ஒரு அறிக்கையைத் தொடர்ந்து இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் நோக்கம் அல்லது மிலே யாரை சந்திப்பார் என்பது குறித்த விவரங்களை ஜனாதிபதி அலுவலகம் வழங்கவில்லை.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள பால்க்லாந்து(Falkland) தீவுகள் தொடர்பான மோதலில் இருந்து உருவான ஆயுத விற்பனை மீதான தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த சந்திப்பின் போது இடம்பெறலாம் என்று தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.





