புகைபிடித்தல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 வயது மகளை கொன்ற பாகிஸ்தானிய பெண்
பாகிஸ்தானில்(Pakistan) ஒரு பெண் புகைபிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள பஞ்சாப்(Punjab) மாநிலம் பஹாவல்பூர்(Bahawalpur) மாவட்டத்தில் உள்ள பஸ்தி சோகரில்(Basti Sohar) இந்த சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, 45 வயதான நபிலா அகமது(Nabila Ahmed) மற்றும் அவரது 16 வயது மகள் ஆயிஷா(Ayesha) இடையே புகைபிடிப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
பொது இடங்களில் தாய் புகைபிடிப்பதை ஆயிஷா விரும்பவில்லை. மேலும், அவர் அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் நபிலா அகமது மிகுந்த கோபத்தில் ஆயிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.





