லெபனானின் சிடோன் அருகே இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம்
லெபனானின்(Lebanon) சிடோன்(Sidon) அருகே இஸ்ரேல்(Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், தெற்கு கடலோர நகரமான சிடோனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இஸ்ரேலிய ட்ரோன் மூலம் ஒரு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர நவம்பர் 2024 போர் நிறுத்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் லெபனான் மீது வழக்கமான தாக்குதல்களைத் நடத்தி வருகிறது.
லெபனான் சுகாதார அமைச்சக அறிக்கைகளின், போர்நிறுத்தத்திற்குப் பிறகு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.





