இலங்கையில் போலி காவல்துறையினர் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் காவல்துறை சீருடை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றும் போலி நபர்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய சீருடையில் வீடுகளுக்கு வருகை தருவோரின் ஆள் அடையாளங்களைச் சோதிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என காவல்துறை ஊடகப் பேச்சாளரான உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.
வீடுகளுக்கு வருவோரிடம் காவல்துறையின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பொதுமக்கள் கேட்க முடியும்.
சந்தேகம் ஏதும் இருப்பின் உடனடியாக அதிகாரிகளுக்கு முறையிட வேண்டும்.
மேலும், தமது வலயத்திற்குப் பொறுப்பான காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பது முக்கியமானதெனக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
(Visited 4 times, 4 visits today)





