இலங்கை செய்தி

இலங்கைக்கு வருகை தரும் வத்திக்கான் செயலர் – இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்

இலங்கைக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

முக்கிய சில ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளன.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!