பங்களாதேஷ் தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு
பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை மற்றும் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் 09 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
ப்ளீச்சிங் பவுடர் (bleaching powder), பிளாஸ்டிக் (plastic) மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு (hydrogen peroxide) உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை சேமித்து வைத்திருந்த ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருவதாக டாக்காவில் உள்ள தீயணைப்பு சேவை தலைமையகத்தின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் தல்ஹா பின் ஜாஷிம் (Talha Bin Jashim) குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழில் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக பங்களாதேஷ் உள்ளது. இங்கு சுமார் 04 மில்லியன் மக்கள் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.





