செய்தி வட அமெரிக்கா

டிரம்பின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்வு

அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் டிரம்பின் 80வது பிறந்தநாளுக்காக வெள்ளை மாளிகையில் அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (UFC) போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஒரு பெரிய அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தப் போகிறோம்” என்று டிரம்ப் வர்ஜீனியாவில் உள்ள மிகப்பெரிய கடற்படைத் தளமான நோர்போக்கில் கடற்படை மாலுமிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் பல வருடங்களாக UFCயின் ஆதரவாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஜூன் 7 அன்று நியூ ஜெர்சியில் நடந்த UFC 316 நிகழ்வில் கலந்து கொண்டார்.

UFC என்பது கலப்பு தற்காப்பு கலைகளுக்கான (MMA) மிகப்பெரிய தொழில்முறை தொடர் ஆகும், இது குத்துச்சண்டை, கிக் பாக்ஸிங், மல்யுத்தம் மற்றும் பிற தற்காப்பு கலைகளின் நுட்பங்களை கொண்ட ஒரு விளையாட்டாகும்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!