எத்தியோப்பியாவில் தேவாலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த ஒரு தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரேர்ட்டி மரியம் தேவாலயத்தில் புனித மேரியைக் கொண்டாடும் வருடாந்திர நிகழ்விற்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“பாதிக்கப்பட்டவர்களில் சில குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர், இதுவரை 25 பேர் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவரான செயோம் அல்தாயே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)





