உலகின் இரண்டாவது பெரிய கால்பந்து மைதானம் மூடப்படுகின்றது
ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து மைதானமும், உலகின் இரண்டாவது பெரிய கால்பந்து மைதானமான பார்சிலோனாவின் கேம்ப் நௌ கால்பந்து மைதானம் இன்று மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மைதானத்தை சீரமைக்கும் பணிக்காக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனாவின் கேம்ப் நௌ கால்பந்து மைதானம் 1957 முதல் 2023 வரையிலான 76 ஆண்டுகளில் பல கால்பந்து போட்டிகளுக்கு பங்களித்துள்ளது.
கேம்ப் நௌ கால்பந்து மைதானம் உலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரபலமான கால்பந்து மைதானங்களில் ஒன்றாகும்.
இது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கால்பந்து கிளப்பின் சொந்த மைதானம் மற்றும் கேம்ப் நௌ கால்பந்து மைதானம் 1982 FIFA உலகக் கோப்பையை நடத்தியது.
பார்சிலோனாவின் கேம்ப் நௌ கால்பந்து மைதானத்தில் 99,354 இருக்கைகள் உள்ளன.
அதே சமயம் 114,000 இருக்கைகளுடன் உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் வட கொரியாவின் ரன்கிராடோ மே 1 ஸ்டேடியம் ஆகும்.
கேம்ப் நௌ கால்பந்து மைதானத்தை புனரமைப்பதற்கு 1.5 பில்லியன் யூரோக்கள் செலவிடப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக 2023/24 சீசனுக்கான கால்பந்து போட்டிகளை அருகில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், மாற்று மைதானத்தில் 60,000 இருக்கைகள் இருப்பதுடன், முந்தைய வருமானத்தை 90-100 மில்லியன் யூரோக்கள் வரை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2026 ஆம் ஆண்டு புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் ஆண்டாகக் குறிப்பிடப்பட்டு புதிய மைதானம் 105,000 பேர் அமரும் மைதானமாக மாற்றப்படும்.
புனரமைப்புக்காக மூடப்பட்டுள்ள கேம்ப் நௌ கால்பந்து மைதானத்தில் உள்ள பழைய இருக்கைகளை வாங்கும் வாய்ப்பும் பார்சிலோனா ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.