பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் – இருவர் மரணம்
பாகிஸ்தானின் முசாபராபாத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு இடையே நடந்த மோதல்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ISI ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் 38 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர், அவற்றில் பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்களை பாகிஸ்தான் காஷ்மீரி சட்டமன்றத்தில் ரத்து செய்வதும் அடங்கும்.
மேலும், மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தான் வாக்குறுதியளித்த நீண்ட காலமாக தாமதமான சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.
இந்த போராட்டத்திற்கான முக்கிய காரணம் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் .
பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை கொல்லும் நோக்கில், பாகிஸ்தான் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.





